திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடி விபத்து: 22 பேர் பலி 

சீனாவில் இரசாயன தொழிற்சாலை ஒன்றின் அருகே நடந்த வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

News image
Updated On :28 நவம்பர் 2018, 1:38 pm

DIN

பெய்ஜிங்: சீனாவில் இரசாயன தொழிற்சாலை ஒன்றின் அருகே நடந்த வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெபே மாகாணத்தில், ஜான்ஜியகோ என்ற இடத்தில்  இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே குறிப்பிட்ட தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். 

புதனன்று இந்த பகுதியில், இரசாயனத்துடன்  நின்று கொண்டிருந்த லாரி ஒன்று , திடீரென வெடித்து சிதறியது.  இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக  காட்சியளித்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.