குஜராத்தில் கும்பல் தாக்குதலுக்கு பயந்து, அங்கிருந்து வெளியேறிய பிற மாநிலத்தவர் குறிப்பாக ஹிந்தி பேசும் மக்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத்திலிருந்து கடந்த சில தினங்களில் சுமார் 20,000 வெளிமாநில மக்கள் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் ருபானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சபர்கந்தா மாவட்டத்தில் சிறுமி ஒருவரை, பிகாரைச் சேர்ந்தவர் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெளி மாநிலத்தவரை மோசமாக சித்திரித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஆயிரக் கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மக்கள் யாரும் வன்முறையை கையிலெடுக்க வேண்டாம் என்று முதல்வர் விஜய் ரூபானி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தால், அதுதொடர்பாக காவல்துறையினருக்கு வெளிமாநிலத்தவர் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிதீஷ் குமார் கவலை: இதனிடையே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நீதிஷ் குமார், குஜராத் தாக்குதல் சம்பவங்களுக்கு கவலை தெரிவித்தார். அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.
யோகி ஆதித்யநாத் பேச்சு: இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், விஜய் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாநிலத்தில் அனைவருடைய பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்று விஜய் ரூபானி வாக்குறுதி அளித்ததாக யோகி ஆதித்யநாத் கூறினார்.
ராகுல் சாடல்-அமைச்சர் பதிலடி: இதனிடையே, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், குஜராத்தில் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது முற்றிலும் தவறானது. வேலையின்மை பிரச்னையே இந்த வன்முறைக்கு மூலக் காரணம் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த வன்முறைக்கு காங்கிரஸின் சதியே காரணம் என்று மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

