
புது தில்லி: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்கள்ளுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 11.91 லட்சம் 'நான் கெசட்டட்' (அரசிதழ் பதிவில் வராத) ஊழியர்களுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 78 நாள் ஊதியமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி இந்தப் பிரிவின் கீழ் வரும் ஒவ்வொருவருக்கும் ரூ. 17951 ஊக்கத் தொகையாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.