பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மாணவர் ஒருவர் செருப்பை வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் வியாழன் அன்று காலை பாபு சப்கர் என்ற இடத்தில நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருர்ந்தார். அவர் மேடையில் அமர்ந்திருந்த பொழுது சாந்தன் குமார் திவாரி என்ற மாணவர் நிதிஷ் குமார் மீது செருப்பு ஒன்றை வீசினார். ஆனால் அந்த செருப்பானது அவர் மீது விழாமல் சில அடி தொலைவு தள்ளி விழுந்தது.
உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அவரை வளைத்து பிடித்தனர். ஆனால் அதற்குள் ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சாந்தன் குமார் திவாரி, தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்றும், பிகாரில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


