கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கங்கை நதியை சுத்தம் செய்யக்கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்த ஆர்வலர் உயிரிழப்பு 

கங்கை நதியை சுத்தம் செய்யக்கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அகர்வால் உயிரிழந்தார். 

News image
Updated On :11 அக்டோபர் 2018, 4:43 pm

DIN

புது தில்லி: கங்கை நதியை சுத்தம் செய்யக்கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அகர்வால் உயிரிழந்தார். 

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரான ஜிடி அகர்வால் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவருக்கு 87 வயதாகிறது. 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை புதனன்று போலீஸ் ஹரிதுவாரில் இருந்து மீட்டு  ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழனன்று உயிரிழந்தார். இவ்வளவு நாட்களாக வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தி வந்த அவர்,  தன்னுடைய கோரிக்கைகளை அரசு நிராகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.