பெங்களூரு: சமூக ஆர்வலர் அகர்வால் மரணமடைந்த விவகாரத்தில், 'இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? என்று பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.
கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோத்ரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரான ஜிடி அகர்வால் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவருக்கு 87 வயதாகிறது. 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை புதனன்று போலீஸ் ஹரிதுவாரில் இருந்து மீட்டு ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழனன்று உயிரிழந்தார். இவ்வளவு நாட்களாக வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தி வந்த அவர், தன்னுடைய கோரிக்கைகளை அரசு நிராகரித்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சமூக ஆர்வலர் அகர்வால் மரணமடைந்த விவகாரத்தில், 'இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? என்று பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்ணாவிரதத்தின் காரணமாக மரணமடைந்த சமூக ஆர்வலர் அகர்வாலுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்த காங்கிரஸைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா, ' இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? அவர் உயிருடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கேலிச்சித்திரம் ஒன்றை தன்னுடைய பக்கத்தில் ட்வீட் செய்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


