நீங்கள் ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை 

நீங்கள் ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் பதிலடியாக நாங்கள் 10 முறை நடத்துவோம் என்று  பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. 
நீங்கள் ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 முறை நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை 
Updated on
1 min read

லண்டன்: நீங்கள் ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் பதிலடியாக நாங்கள் 10 முறை நடத்துவோம் என்று  பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. 

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் பொது உறவுகள் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர். இவர் லண்டனில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது பேசியதாக, ரேடியோ பாகிஸ்தான் மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:

பாகிஸ்தானுக்கு எதிராக இத்தகைய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை நடத்த நினைப்போர் பாகிஸ்தானின் எதிர்த்தாக்குதல் திறமைகளை மறந்து விட வேண்டாம். ஒரு தாக்குதல் போதும் இந்தியா மீது நாங்கள் 10 தாக்குதல் நடத்துவோம்.  

பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீட்கவே பாடுபட்டு வருகிறது, கடந்த தேர்தல் நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் வெளிப்படையாக நடந்த ஒரு தேர்தலாகும். 

பாகிஸ்தானில் நல்ல சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, சர்வதேச ஊடகங்கள் எப்போதும்  பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாக சித்தரிப்பதை மாற்றி நல்ல விஷயங்களையும் எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com