நாடு முழுவதும் கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமிருதசரஸில் தண்டவாளத்தையொட்டிய ஒரு மைதானத்தில் கடந்த 19-ஆம் தேதி தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தண்டவாளத்தில் நின்றபடி நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியது. இதில் 59 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் 49,790 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 7,908 பேரும், தெற்கு மண்டலத்தில் 6,149 பேரும், கிழக்கு மண்டலத்தில் 5,670 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விதிமுறைகளை மீறி தண்டவாளத்தை கடந்து செல்வது, பாதுகாப்பு விதிமீறல், எச்சரிக்கை அறிவிப்பு மீறல், மேம்பாலத்தை தவிர்த்து தண்டவாளத்தை கடந்து செல்லுதல், செல்லிடப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்லுதல் போன்ற காரணங்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தை தவிர்ப்பது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளத்தை சேதப்படுத்துதல் போன்றவை ரயில்வே சட்டம் 1989ஆம் ஆண்டு 47வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். நிகழாண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் வரையிலும் 1,20,923 பேர் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2.94 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1,75,996 பேர் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

