கர்நாடகத்தில் நவம்பர் 3-இல் இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் பாஜகவைத் தோற்கடிப்பதே காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணியின் ஒரே இலக்கு என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
சிவமொக்காவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
சிவமொக்கா மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே பாஜக வேட்பாளராகத் தனது மகன் ராகவேந்திராவை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா அறிவித்துவிட்டார்.
சிவமொக்கா மாவட்டத்தில் அடிக்கடி இடைத்தேர்தல் நடப்பதற்கு எடியூரப்பாவும், அவரது மகன் ராகவேந்திராவும்தான் காரணம். இவர்கள் இருவரும் இடைத்தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாஜகவில் போட்டியிடுவதற்கு ராகவேந்திராவைவிட்டால் வேறு ஆளே இல்லையா? எடியூரப்பாவால்தான் ராகவேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகள் என 5 தொகுதிகளுக்கு நவம்பர் 3-இல் நடைபெறும் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்- ம.ஜ.த. வேட்பாளர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். 5 தொகுதிகளிலும் பாஜகவைத் தோற்கடிப்பதே இலக்காகும். இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்திருந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மோடி தோல்வி அடைந்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் வன்முறையைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை. மோடியின் ஆட்சியில் ஜம்மு- காஷ்மீரில் வன்முறை பெருகியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது.
மத்திய அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை வெறும் பூஜ்யமாகும். எனவே, கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 3 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ்- ம.ஜ.த. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தர பாஜக எம்.பி.களால் முடியவில்லை. மத்திய அரசிடம் நிதி ஆதாரங்களைக் கேட்கும் ஆர்வம் பாஜக தலைவர்களிடம் இல்லை.
ஆட்சியில் இருந்தால் மட்டும் செயல்படும் பாஜக தலைவர்கள், மக்களின் தேவைகளுக்கு இணங்குவதேயில்லை என்றார் தினேஷ் குண்டுராவ்.
பேட்டியின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காகோடு திம்மப்பா, கிம்மனே ரத்னாகர், அமைச்சர் ஜெயமாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


