கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மும்பையில் காங்கிரஸ் தொண்டர் கொலை

மும்பையில் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்ட

Updated On :22 அக்டோபர் 2018, 8:14 pm


மும்பையில் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 
மனோஜ் துபே (45) என்ற காங்கிரஸ் தொண்டர் திங்கள்கிழமை மும்பை அசல்ஃபா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். 
நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். 
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இறந்து போன மனோஜ் துபே ஆளுங்கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இதன் காரணமாக ஏற்பட்ட மோதலால் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மை காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.