புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பெங்களூரு பல்கலை மாணவர்களாக சேர்ந்திருக்கும் சசிகலா மற்றும் இளவரசி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பல்கலையின் மாணவர்களாக சேர்க்கை பெற்றுள்ளனர்.

News image
Updated On :26 அக்டோபர் 2018, 8:54 am


பெங்களூரு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பல்கலையின் மாணவர்களாக சேர்க்கை பெற்றுள்ளனர்.

ஏற்கனவே சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் சேர்ந்து பயின்று வரும் நிலையில், இளவரசியும் தற்போது சேர்ந்துள்ளார்.

இளவரசி, 15 நாட்கள் பரோலில் வெளியே வருவதால், பெங்களூரு பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் சேர்வதற்கான நடைமுறைகள் வியாழக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கே வந்து மாணவ சேர்க்கையை செய்து முடித்துள்ளனர்.

ஏற்கனவே சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கன்னடம் பயிலும் வகுப்பில் சேர்க்கை பெற்றதோடு, இளவரசியையும் படிக்குமாறு அழைப்பு விடுத்தார். அதையடுத்து இளவரசியும் தொலைதூரக் கல்வியில் சேர்ந்துள்ளார்.

இவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு, பல்கலைப் பேராசிரியர்கள் சிறைக்கேச் சென்று இருவருக்கும் பாடம் நடத்துவார்கள் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.