புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சபரிமலை ஐயப்பன் கோயிலில் போராட்டம்: 440 வழக்குகள்; 1,400 பேர் கைது

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :26 அக்டோபர் 2018, 10:33 am


திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எர்ணாகுளத்தில் மட்டும் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து வரும் நாட்களில் கைது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். காவல்துறையினரையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று  தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.