ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிரட்டல் விடுத்தும், ரூ.50 லட்சம் பணம் கேட்டும் கடிதம் எழுதியது சத்தீஸ்கர் மாநில சிறையில் அடைபட்டுள்ள கைதி ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தக் கைதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதேபோன்று பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அவர் ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒடிஸா முதல்வர் பட்நாயக்குக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அனுப்புநர் விவரங்கள் முறையாக இல்லை. அதைப் படித்த போலீஸார் அதில் சில மிரட்டல் வாக்கியங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், ரூ.50 லட்சம் பிணைத் தொகையை ஒடிஸா முதல்வர் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தாக அவர்கள் கூறினர்.
கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தபோது அது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாநில போலீஸாரிடம் ஒடிஸா காவல் துறையினர் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பிலாஸ்பூர் போலீஸார், அக்கடிதத்தை எழுதியது சிறைக் கைதி ஒருவர் என்பதை கண்டறிந்தனர். கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பிலாஸ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் புஷ்பேந்திர நாத் செளஹான். அவர்தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
விளம்பர நோக்கத்துக்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய போலீஸார், கைதி செளஹான் மனப் பிறழ்வு கொண்டவர் என்றும் நிலையான சிந்தனை அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

