தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சர்வதேச எல்லைப் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.400 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகள் நெடுகிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.400 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:33 pm


சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகள் நெடுகிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.400 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்வதேச எல்லையையொட்டி 17 மாநிலங்களில் உள்ள பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியடையும் நோக்கில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2017-18ஆம் நிதியாண்டில் ஏற்கெனவே ரூ.1,100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கூடுதலாக ரூ.400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (பிஏடிபி) 17 மாநிலங்களில் உள்ள 111 எல்லை மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களில், சர்வதேச எல்லையையொட்டிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், எல்லைப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், குடிநீர் வசதி, தகவல் தொடர்பு வசதி, கழிவுநீர் பாதை வசதி போன்றவை செய்து தரப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ், 2018-19ஆம் நிதியாண்டில், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அரசுகளுக்கு ரூ.399.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 61 கிராமங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவைகள் மாதிரி கிராமங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 1986-87ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசால் ரூ.13,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானோடு 3,323 கிலோ மீட்டர் தூர எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இதேபோல், சீனாவுடன் 3,488 கிலோ மீட்டர் தூரம், நேபாளத்துடன் 1,751 கிலோ மீட்டர் தூரம், பூடானுடன் 699 கிலோ மீட்டர் தூரம், மியான்மருடன் 1,643 கிலோ மீட்டர் தூரம், வங்கதேசத்துடன் 4,096 கிலோ மீட்டர் தூரம் எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.