சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) தொடர்பான விளம்பரங்களுக்காக ரூ.132.38 கோடி மத்திய அரசு செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி குறித்தான விழிப்புணர்வு மற்றும் விளம்பரங்களுக்கு மத்திய அரசு செலவளித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில்,
அச்சு ஊடகத்தின் மூலம் ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களை வெளியிட்டதற்கு ரூ. 126.93 கோடி செலவு செய்யப்பட்டது.
எனினும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட்டதற்காக எந்த செலவும் செய்யப்படவில்லை. இவை தவிர்த்து மற்ற வழிகளில் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு ரூ. 5.44 கோடி செலவாகியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த புதிய வரி விதிப்பு முறை குறித்து மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு ஊடகங்கள் வழியாக மத்திய அரசு விளம்பரம் செய்தது.
ஜிஎஸ்டி முறையின் பயனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனை மத்திய அரசு ஜிஎஸ்டி விளம்பர தூதராக நியமித்தது. மேலும், ஜிஎஸ்டி செயல்முறையில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஜிஎஸ்டி குறித்த 50 கேள்வி பதில்களை முழு பக்க அளவிலான விளம்பரங்களாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி துறை அமைப்பு வெளியிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

