மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: ஜார்க்கண்டில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தொலைபேசி அழைப்புகள் மூலமாக மக்களை ஏமாற்றி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


தொலைபேசி அழைப்புகள் மூலமாக மக்களை ஏமாற்றி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மாண்டல், யூகல் மாண்டல், சந்தோஷ் யாதவ் ஆகியோர், பலருடன் சேர்ந்து வங்கி அதிகாரிகள் போன்று தொலைபேசியில் மக்களிடம் பேசி, அவர்களது வங்கிக் கணக்கு தகவல்களை பெற்று சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர் என்று அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு ஜாம்தாரா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொலைபேசியில் வங்கிக் கணக்கு தகவல்களை யார் கேட்டாலும் பகிரக் கூடாது என்று கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாரா பகுதியில் இருந்து சிலர் தொலைபேசி மூலம் மக்களிடம் இருந்து தகவல்களை பெற்று, அதன் மூலமாக வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடிகளை கைப்பற்றியுள்ளனர். மாநில போலீஸார் அவர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கு என்பதாலும் அவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் வகையிலும் இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். போலீஸார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வது போல அமலாக்கத் துறையினர் முதல் முறையாக தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த ஏமாற்றுக்காரர்கள் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகள் மேற்கொண்டுள்ளனர். வங்கிக் கணக்குகளின் தகவலை பகிராவிட்டால் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று அவர்களை வற்புறுத்தி தகவலைப் பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்களின் ஒரு முறை குறியீட்டு எண்(ஓடிபி) ஆகியவற்றை கணிணி மூலம் திருடி அவர்களது பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர். திருடிய பணத்தை பரிமாற்றம் செய்ய போலியான ஆவணங்கள் கொடுத்துள்ள வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒவ்வொரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் ஆர்பிஐ மற்றும் செபி அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு திருடியுள்ளனர். ஜாம்தாரா பகுதி இந்தியாவின் இணையவழி குற்றங்களின் தலைநகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இது மாநிலத்துக்கு மிகப் பெரிய அவமானம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாட்டில் நடைபெறும் பல இணையவழி குற்றங்களுக்கு காரணம் ஜாம்தாரா பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள குற்றவாளிகள் தான் என்று மத்திய உள்துறை அமைச்சக செயலர் ராஜீவ் கெளபா தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.