கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ஆம் தேதி நாடு முழுவதும் பந்த்: காங்கிரஸ் முடிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 10-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 10-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
கடைகளை மூடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களுக்கும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, அசோக் கெலாட், அகமது படேல், மோதிலால் வோரா ஆகியோர் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இதனை கூட்டாக அறிவித்தனர்.
நாடு முழுவதும் 10-ஆம் தேதி பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு, எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்' என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
மற்றொரு மூத்த தலைவரான அகமது படேல் கூறியதாவது:
இடதுசாரி கட்சிகளிடம் போராட்டம் தொடர்பாக விளக்கப்பட்டது. சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தது. எனினும், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பதால் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது என்றார் அகமது படேல்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி விலகியபோது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதிலும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.41-ம், டீசல் லிட்டருக்கு ரூ.55.49-ஆக இருந்தது. ஆனால், தற்போதைய பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சர்வதேச அளவில் பீப்பாய் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறபோதிலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ.11 கோடி வரியை கூடுதலாக மோடி அரசு ஈட்டியுள்ளது. இது மக்கள் மீது ஏற்றப்பட்ட சுமை என்று ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.