புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Published On :

இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மாத்திரைகள், டானிக் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு 350 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் தொடுத்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
328 வகை கலவை மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு மருந்துகளின் தாக்கம் தீவிரமானவை ஆகும். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த 328 வகை மருந்துகளையும் விற்கவும், இருப்பு வைக்கவும், தயாரிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த அறிவிப்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் தடை விதிக்கப்பட்ட கலவை மருந்துகளின் விவரத்தையோ, பெயர்களையோ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.
இந்த தடை உத்தரவு குறித்து, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தேவ்நாத் சௌதரி கூறுகையில், இந்த வகை மருந்துகளை, சிறிய மற்றும் பெரிய மருந்து நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த தடை உத்தரவால் ஆண்டுக்கு ரூ.1,588 கோடி பாதிப்பு ஏற்படும். எனினும், இந்த உத்தரவை மதிப்போம்' என்றார்.
அனைத்து இந்திய மருந்து நடவடிக்கை குழுத் தலைவர் மாலினி அய்சோலா, இந்தத் தடையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தீவிரமான பிரச்னைக்கு தீர்வு காண இந்த தடை உதவும்' என்றார்.
2016ஆம் ஆண்டு தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அபோட் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. அந்த நிறுவனத்திடம், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தடை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.