
கும்பல் தாக்குதலில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.1 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு பிகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கும்பல் தாக்குதலில் பாதிக்கப்படுவோருக்கு இடைக்கால நிவாரணமாக, ரூ.1 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதன்மைச் செயலர் சஞ்சய் குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கும்பல் தாக்குதல் நிகழ்ந்த 15 நாள்களில், பாதிக்கப்பட்டவருக்கு அந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட வேண்டும். மேலும், அதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள், விரைவு நீதிமன்றங்கள் விசாரிக்கப்பட்டு, 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு, மொத்த இழப்பீடு கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும். கும்பல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சஞ்சய் குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






