இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிறது மோடி அரசு'

தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் சஞ்சய்தத். 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் சஞ்சய்தத். 
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்து விட்டதாக மோடி கூறுவது பொய். இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளதற்கு காரணம் மோடிதான். 
காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதை மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் சமாளித்து பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டனர். ஆனால் அவர்கள் மீது பாஜக அரசு ஆதாரமில்லா குற்றச்சாட்டை முன் வைக்கிறது. 
நாடு மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. பண மதிப்பிழப்பு, கருப்பு பண மீட்பால் நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றார் மோடி. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. 
தமிழகத்தில் ஊழல் அதிர்ச்சியளிக்கும் நிலையில் உள்ளது. ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் ஊழல் செய்வோர் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து, அவரைப் பதவியில் இருந்து நீக்குவோம் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.