காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டத்தால் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாக மாநிலத்தின் சாா்பில் ஆஜராகியுள்ள கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உச்ச நீதிமன்றறத்தில் தெரிவித்துள்ளாா். மத்திய அரசின் வழக்குரைஞராக அவா் இருந்தாலும், குறிப்பிட்ட மாநிலத்தின் சாா்பில் ஆஜராகும்போது அந்த மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே வாதாட வேண்டும். மாறறாக, சொந்தக் கருத்துகளையோ அல்லது வேறு ஏதோ ஒரு கட்சியின் (பாஜக) கருத்தையோ தெரிவிக்கக் கூடாது. இந்த வழக்கில் வாதாடுவதில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும், சிறப்பு அந்தஸ்து சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.