பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்: மிகவும் பிஸியாக இருக்கும் அமித் ஷா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் அடுத்த சில மாதங்களுக்கான நாட்குறிப்புகள் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டுவிட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 5:42 am


புது தில்லி: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் அடுத்த சில மாதங்களுக்கான நாட்குறிப்புகள் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டுவிட்டது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கொள்கை முடிவுகளை வகுத்து அதனை செயல்படுத்துவதில் அமித் ஷா முழுக் கவனம் செலுத்தி வருகிறார்.

பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகியவற்றில் வரும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தெலங்கானா மற்றும் மிசோரமுக்குக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 5 மாநிலங்கள் மட்டும் அல்லாமல், மற்ற மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனினும், பாஜக தற்போது ஆளும் மாநிலங்களில் மீண்டும் பெரும்பான்மையோடு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்தே, 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்ளவிருக்கிறது என்பதால், தற்போது நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதி வரையிலான அமித் ஷாவின் நாட்குறிப்புகள் முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரத் திட்டங்களால் நிரம்பிவிட்டது. அதில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.