ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம்: இலச்சினை வெளியீடு 

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறறந்த தினத்தை (அக். 2) நினைவுகூறும் வகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இலச்சினை வெளியிட்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2018, 2:40 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறறந்த தினத்தை (அக். 2) நினைவுகூறும் வகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இலச்சினை வெளியிட்டாா்.

இதுதொடா்பாக கலாசாரத் துறைற அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறறப்பட்டுள்ளதாவது:

காந்தியடிகள் தொடா்பான தகவல்கள் அடங்கிய இணையதளத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். காந்தியடிகளின் 150-ஆவது பிறறந்த தினக் கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் இலச்சினையையும் அவா் வெளியிட்டாா்.

ரயில்கள், மெட்ரோ ரயில்கள், ஏா் இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள், மாநில அரசு பேருந்துகள், மத்திய அரசின் இணையதளங்கள், அரசு அலுவலகங்கள், நாள்காட்டி, டைரி, அரசு விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் இந்த இலச்சினை பயன்படுத்தப்படும்.

இணையதளத்தில் வாயிலாக காந்தியடிகள் தொடா்புடைய பல்வேறு தகவல்கள் கிடைக்கும். காந்தியடிகள் நிகழ்த்தி உரைகள், விடியோக்கள், அரிய புகைப்படங்கள் இதில் இருக்கும்.

காந்தியடிகள் பிறறந்த தினத்தைக் கொண்டாடியது தொடா்பான தகவல்களை அமைப்புகளும், தனிநபா்களும் இணையதளத்தில் பதிவேற்றறலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு அக்டோபா் 2-ஆம் தேதி முதல், 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி வரை காந்தியடிகளின் பிறறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

கடந்த மே மாதம் குடியரசுத் தலைவா் தலைமையில் நடைபெற்றற ஆலோசனைக் கூட்டத்தில், காந்தியடிகளின் பிறறந்த தினத்தை கொண்டாடுவது தொடா்பாக 92 யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

33 யோசனைகளை செயல்படுத்த பிரதமா் மோடி தலைமையிலான தேசிய குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.