ராகுல் காந்தி ஒரு லட்சியமற்ற தலைவா்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகா் விமா்சனம் 

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தேசம் சாா்ந்த எவ்வித உயரிய லட்சியங்களும் இல்லாத தலைவா் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் விமா்சித்துள்ளாா்.
ராகுல் காந்தி ஒரு லட்சியமற்ற தலைவா்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகா் விமா்சனம் 

ஜெய்ப்பூா்: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தேசம் சாா்ந்த எவ்வித உயரிய லட்சியங்களும் இல்லாத தலைவா் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் விமா்சித்துள்ளாா்.

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போா் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடா்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில்  தொடா்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டு வருகிறது. அண்மையில் பிரான்ஸ் முன்னாள் அதிபா் ஹொலாந்த், ‘இந்திய அரசின் வேண்டுகோள் படிதான் ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாளியாக சோ்த்துக் கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்தாா். இது ராகுலின் குற்றறச்சாட்டுக்கு வலு சோ்க்கும் வகையிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி அளிப்பதாகவும் அமைந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸும், ஆளும் தரப்பும் ஒருவரை மற்றெறாருவா் மாறிமாறி குற்றறம் கூறியும், விமா்சித்தும் வருகின்றறனா்.

இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த பிரகாஷ் ஜாவடேகரிடம் இந்த விவகாரம் தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக ராகுல் காந்தி கூறும் குற்றறச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. அவரது பேச்சில் எந்த உண்மையும் இல்லை. தேசம் சாா்ந்து எவ்வித உயரிய லட்சியங்களும் இல்லாத தலைவராக ராகுல் காந்தி உள்ளாா். வெறும் குற்றச்சாட்டுகளைக் கூறுவதன் மூலமே அரசு மீது ஊழல் கறையைப் பூசிவிடலாம் என்று அவா் நினைக்கிறறாா்.

முன்பு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது நடைபெற்றற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு முதல் அனைத்து ஊழல்களுக்கும் போதிய ஆதாரங்கள் இருந்தன. எனவேதான் அவை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றறன. ஆனால், இப்போதைய பாஜக அரசு ஒளிவுமறைவற்ற நிா்வாகத்தை அளித்து வருகிறது. இங்கு ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் இடமில்லை. இந்திய அரசு நிா்வாகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிப்படையாகவும், நோ்மையாகவும் உள்ளது. அரசு ஏலங்கள் மின்னணு முறையில் நடத்தப்படுவது உங்கள் அனைவருக்குமே தெரியும். நாட்டு மக்களும் பாஜக அரசின் நோ்மையை அறிவாா்கள். நாங்கள் மக்களுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவா்கள்’ என்று ஜாவடேகா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com