யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆட்டம் இனிதான் ஆரம்பம்: காங்கிரஸ் தலைவர் ராகுல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 10:36 am

DIN

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில்,

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் ஊழல் வெளியிடப்படும். இதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு கொள்ளையடித்தது என்று காங்கிரஸ் கட்சி ஆதாரத்துடன் வெளியிடும். இதில் அனில் அம்பானிக்கு உதவியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு துணை நின்றுள்ளார்.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, ஊழல்வாதியான அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை வழங்கியுள்ளார். இந்த நாட்டின் திருடன் என்று பிரதமர் மோடி என்னை குற்றம்சாட்டினார். 

ஆனால், ரூ.45 ஆயிரம் கோடி கடனில் உள்ள அனில் அம்பானியிடம் இந்நாட்டின் இளைஞர்களின் பணத்தையும், இந்திய விமானப் படையையும் அடகு வைத்த பிரதமர் மோடி தான் உண்மையான திருடன். இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு பிரதமர் மோடியால் எனது கண்களைப் பார்த்து பதிலளிக்க முடியவில்லை. 

இவ்வாறு ஒவ்வொன்றாக பிரதமர் மோடி இந்நாட்டின் காவலாளி அல்ல திருடன் என்பதை நிரூபிப்போம். ஆட்டம் இனிதான் ஆரம்பம். அடுத்த 3 மாதங்களில் இது இன்னும் சுவாரஸ்யம் ஆகும். ஏனெனில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், விஜய் மல்லையா, லலித் மோடி, பணமதிப்பிழப்பு விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பிரதமர் மோடி தான் முக்கிய திருடன் என்பதை  ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.