இந்தியாவுடன் போருக்கான வாய்ப்பு இல்லை: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவுடன் போர் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
இந்தியாவுடன் போருக்கான வாய்ப்பு இல்லை: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்
Updated on
1 min read


நியூ யார்க்: இந்தியாவுடன் போர் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட குரேஷி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்னைகளை சரி செய்ய ராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு கிட்டாது. பேச்சுவார்த்தை ஒன்று மட்டுமே வழி என்று தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஜூலை 26ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சினை நினைவு கூர்ந்தார். அமைதிப் பேச்சுக்காக இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று கூறியதை சுட்டிக்காட்டினார். நிச்சயம் நாங்கள் அதைச் செய்வோம் என்று குரேஷி கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com