
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கேரளம் வந்திருக்கும் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்டி - சட்டை அணிந்து புதிய தோற்றத்தில் காட்சியளித்தார்.
ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும், உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்காவும் உடன் வந்துள்ளார். வயநாடு வந்திருக்கும் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு ராகுல் மற்றும் பிரியங்கா சாலை மார்க்கமாக பேரணியாக செல்கின்றனர். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கோழிக்கோட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தேர்தல் அதிகாரியிடம் காலை 11 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.