மகாத்மா காந்தி அச்சப்பட்ட வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர்: யோகி ஆதித்யநாத்

மகாத்மா காந்தி அச்சப்பட்ட குடும்ப வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். 
மகாத்மா காந்தி அச்சப்பட்ட வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர்: யோகி ஆதித்யநாத்

மகாத்மா காந்தி அச்சப்பட்ட குடும்ப வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஏனென்றால் அது பின்னாளில் நேருவின் குடும்ப சொத்தாக மாறி வாரிசு அரசியலை முன்னெடுக்கும் என்று அச்சப்பட்டார். இன்று அதை நிரூபிக்கும் வகையில் ராகுலும், பிரியங்காவும் வாரிசு அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

வருகிற மக்களவைத் தேர்தலில் கடந்த முறை போன்று இம்முறையும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்வது உறுதி. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி பயம் காரணமாகத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி பதிப்பின் எந்த இடத்திலும் காங்கிரஸ் கொடியோ அல்லது தேசிய கொடியோ இடம்பெறவில்லை. மாறாக பச்சை நிறத்தாலான நிலா மற்றும் நட்சத்திரம் இடம்பெற்ற கொடி தான் காணப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானின் வாக்குறுதியை தான் காங்கிரஸ் பிரதிபலிக்கிறது என குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com