ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஹைதராபாத்தில் சொகுசு காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.8 கோடி பறிமுதல்: 7 பேர் கைது

ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 5:53 am

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் முக்கிய சாலைகளில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸார் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டர். 

அதில் ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த கட்டுக்கட்டான ரூ. 2 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்ய பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வங்கிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் இருந்த ரூ. 6 கோடியையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், சொகுசு கார்கள் மற்றும் காரில் வந்த 7 பேரையும் கைது செய்து இவ்வளவு பெரிய ரொக்கப்பணம் எங்கிருந்து, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பணத்துக்கு உரியவர்கள் யார்?, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவதற்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணங்களில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.