ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி பேச்சு 

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:38 am

DIN

சில்சார்: முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.

அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தில் வியாழன் அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கே அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. நாட்டில் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த முதல்கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது.  மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் விதமாக ஆதரவு அலை வீசுவதை இது நமக்கு உணர்த்துகிறது.

இந்த ஆதரவு அலை கண்டிப்பாக தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அசாமில் வியாழனன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதி. இனி எதிர்க்கட்சிகளுக்கு இங்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.