மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

யார் தேவை? நேர்மையான காவலர்களா? ஊழலில் சிறந்தவர்களா? மோடி கேட்கிறார்

ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு நேர்மையான காவலர்கள் தேவையா அல்லது ஊழலில் புகழ்பெற்றவர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 8:00 am

PTI


அகமத்நகர்: ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு நேர்மையான காவலர்கள் தேவையா அல்லது ஊழலில் புகழ்பெற்றவர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அகமத்நகரில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சக்தி மிகுந்த நாடாக உருமாறியுள்ளதாக உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

சுமார் 10 ஆண்டுகாலம் நடந்த ஆட்சியை நினைவிருக்கிறதா? ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கிய மத்திய அரசு, ஊழலில் சிறப்பாக செயல்பட்டதும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்ததும் மறக்க முடியாதவையே.

எனவேதான் உங்களுக்கு நியாயமான காவலர் தேவையா அல்லது ஊழலில் சிறந்தவர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

21ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர், இளைஞிகள் தற்போது முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். மக்களைப் பற்றி சிந்திக்காத காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதே தவறு எனவும் மோடி கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.