பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பை தாராவி கட்டட விபத்து: ஒருவர் சாவு, 3 பேர் படுகாயம்

மும்பையின் தாராவி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image
Updated On :15 ஏப்ரல் 2019, 5:41 am

DIN

மும்பையின் தாராவி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தாராவியின் பிஎம்பிஜி காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விபத்துக்குள்ளானது. 

Story image

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பைப் விழுந்தது. இதையடுத்து அந்த கட்டடத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் சரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருகிலிருந்த ஆட்டோ நொருங்கியது. 

Story image

அதிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் உட்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஒப்பந்ததாரரின் அலட்சிம் தான் காரணம் என குற்றம்சாட்டினர்.

Story image

இந்நிலையில், கட்டட விபத்து குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.