வாக்குப்பதிவு எந்திரங்களை சுமந்து சென்ற பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்: குவியும் பாராட்டுக்கள் (விடியோ)

கேரளாவில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஊழியர்களுடன் சுமந்து சென்ற பெண் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
வாக்குப்பதிவு எந்திரங்களை சுமந்து சென்ற பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்: குவியும் பாராட்டுக்கள் (விடியோ)

திரிச்சூர்: கேரளாவில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஊழியர்களுடன் சுமந்து சென்ற பெண் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

செவ்வாயன்று கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையமொன்றில்  அதிகாரிகளும் காவல்துறையினரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட பெட்டிகளை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில் ஞாயிறன்று ஈடுபட்டு இருந்தனர். இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சித்தலைவருமான் அனுபமா கண்காணித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு காவலர் மட்டும் பெட்டியை லாரியில் இருந்து இறக்குவதற்காக வாகனத்தின் அருகில் மற்றொரு காவலருக்காக காத்துக் கொண்டு நின்றிருந்தார். இதை பார்த்த அனுபமா உடனடியாக அந்த காவலருடன் சேர்ந்து ஒரு கை பிடித்து பெட்டியை உள்ளே கொண்டு சென்றார்.

இதைக் கண்டு அவருக்கு உதவ இதர அதிகாரிகள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களை சைகையாலே வேண்டாம் என்று கூறி தானே கொண்டு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களால் வைரலாக  பரவுகிறது.

பெரிதாக கவுரவம் பார்க்காமல் ஊழியர்க்குஉதவிய ஆட்சித் தலைவர் அனுபமாவுக்கு பாராட்டுகள் குவிகின்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com