தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் குற்றவாளி என்று தீர்ப்பு 

இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2019, 6:31 pm IST

சூரத்: இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவரான சாமியார் ஆசாராம் பாலியல் வழக்குக்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளானவர்.

இந்நிலையில் இளம்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சூரத்தில் அமைந்துள்ள சாமியாரின் ஆசிரமத்தில் அந்த இளம்பெண் 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சிஷ்யையாக தங்கி இருந்தார். அப்போது சாமியாரின் மகனான நாராயண்  சாய் தனக்குத் தொடந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் 2013-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதைத் தொடந்து விசாரணையின் முடிவில் ஹரியாணாவின் பிப்லியிலிருந்து நாராயண் சாய் கைது செய்ப்பட்டார்.

போலீசார் தொடந்த வழக்கானது சூரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் வெள்ளியன்று நாராயண் சாய் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது.        

அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாரம்  ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.