புது தில்லி: 'உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை ..உட்கார்!' என்று அதிமுகவின் ஒரே எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்திடம், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களவையில் செவ்வாயன்று இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவாதத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, 'ஏதோ செயற்கரிய செயலைச் செய்து விட்டதை போல பாஜக இந்த செயலுக்கு பெருமிதம் கொண்டு பெருமை பேசி வருகிறது; ஆனால் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவால் வெற்றி பெற இயலவில்லை. அது ஏன் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும என்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தேனி தொகுதியின் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார். அதற்கு திமுகவின் கனிமொழி முதலில் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதும் ரவீந்திரநாத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, 'மக்களவை என்பது முதுகெலும்புள்ளவர்கள் பேசும் இடம்; உனக்கு முதுகெலும்பு கிடையாது, உட்கார்’ என்று ஆத்திரமாகக் கூறினார்.
இதன்காரணமாக அங்கு சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷியை மிரட்டிய ஜேமிசனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி!
சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வு
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


