வணிக சிலிண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க கர்நாடக ஹோட்டல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வணிக சிலிண்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக ஹோட்டல் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ஜி.கே. ஷெட்டி பேசியதாவது, "உடனடி திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அதிகரிக்கும் செலவுகளை நுகர்வோர் மீது செலுத்தப்படுவதைத் தவிர, வணிகங்களுக்கு வேறு வழியில்லை.
இதனால், வெளியில் சாப்பிடுவது என்பது மிகவும் விலை உயர்ந்ததாக மக்கள் எண்ணுகின்றனர். இது விநியோகச் சங்கிலிகளை கடுமையாக பாதித்துள்ளது.
எல்பிஜி பற்றாக்குறையும் உயர்வும், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான செயல்பாட்டு செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, பணவீக்க அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும்.
இத்தகைய சவாலான காலங்களில், இந்தத் துறையை ஆதரிப்பது அதன் உயிர்வாழ்வையும் நீண்ட கால நிலைத்தன்மையையும் உறுதி செய்வது அவசியம்" என்று தெரிவித்தார்.
Summary
Karnataka hotels association demands GST cut on commercial LPG cylinders to 5 percent
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

என்ன, இனி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் வாங்கலாமா?

துப்பாக்கி முனையில் ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



