கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது


கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கேரளாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதேபோல் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...