வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி மகன் கைது

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2019, 7:04 am

DIN

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ரூபா கங்குலி. இவருடைய மகன் ஆகாஷ் முகர்ஜி(20). நேற்றிரவு இவர் கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இவருடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோல்ப் கிளப்பின் சுவரில் மோதியது. 

இந்த சம்பவத்தில் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆகாஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் ஆகாஷ் முகர்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி கடந்த 2015ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.