நக்சலைட்டுகள் அபாயம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை 

நக்சலைட்டுகள் தாக்குதல் அபாயம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன், உள்துறை அமைச்சர்  அமித் ஷா திங்களன்று ஆலோசனை நடத்தினார்.
நக்சலைட்டுகள் அபாயம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை 

புது தில்லி: நக்சலைட்டுகள் தாக்குதல் அபாயம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன், உள்துறை அமைச்சர்  அமித் ஷா திங்களன்று ஆலோசனை நடத்தினார்.

நக்ஸலைட்டுகளுக்கு எதிராக மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டன.

தில்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், பிஹார், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அவர்களுடன் மேற்கண்ட 10 மாநிலங்களின் போலீஸ் டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்களையும் அமித் ஷா சந்தித்து உரையாடினார். .

உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் கிஷன் ரெட்டி, உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் மற்றும் துணை ராணுவப்படையின் இயக்குநர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பு ஏற்றபின் மாநில முதல்வர்களுடன் நடத்தப்படும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com