அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மனுக்கள் தாக்கல்!
அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.
அதே வேளையில், மசூதி கட்டுவதற்காக சன்னி வஃக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலத்தை அளிக்க வேண்டுமெனவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என மத்திய சன்னி வஃக்பு வாரியம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு கடந்த 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
இந்தநிலையில், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மவுலானா ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மகபசூர் ரஹ்மான், மிஷ்பாஹுதீன் ஆகிய 4 பேரும் தனித்தனியாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...