ஹைதராபாத்: தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று ஹைதராபாத் வந்தனர்.
முதலில் அவர்கள், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுன்ட்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான ஷத்நகரின் சடன்பள்ளி கிராமத்தில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்துகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், என்கவுன்ட்டர் எப்படி நடந்தது என்பது பற்றி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.
அதோடு, பெண் மருத்துவர் கடத்தப்பட்ட டொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கும் நேரில் வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


