தில்லி தீ விபத்து: கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
தில்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


தில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தில்லி காவல் துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறியதாவது, தில்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் ரெஹான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...