மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிஸா மாநில முன்னாள் அமைச்சர் காலமானார்; முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல்

ஒடிஸா மாநில முன்னாள் அமைச்சர் பகாபத் பிரசாத் மோகந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93.

News image
Updated On :8 டிசம்பர் 2019, 6:31 am

ஒடிஸா மாநில முன்னாள் அமைச்சர் பகாபத் பிரசாத் மோகந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93.

மொஹந்தி, ஒடிஸா மாநில சட்டசபைக்கு மூன்று முறை கேந்திரப்பாரா தொகுதியில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1971 ஆம் ஆண்டில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இருந்தும், 1985 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் தேர்வானார். மேலும், மாநில உயர்கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

முன்னாள் அமைச்சரின் மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மோகந்தி ஒரு திறமையான நிர்வாகி மற்றும் அனுபவமுள்ள அரசியல்வாதி என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.