குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ஆனந்த் சர்மா

குடியரிமை சட்டத் திருத்த மசோதா நாட்டின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். 
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ஆனந்த் சர்மா
Published on
Updated on
1 min read

குடியரிமை சட்டத் திருத்த மசோதா நாட்டின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக, மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது அவர் பேசியதாவது, 

பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது இந்திய குடியரசின் மீதான தாக்குதல். இதனால் நாட்டின் ஆன்மா காயப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. இதனால் நாட்டின் அறநெறி பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தில் மறுபிறப்பு நம்பிக்கை உள்ளது, அப்போது நமது பெரியவர்களை சந்திப்பதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடியை  ஒருவேளை மகாத்மா காந்தி சந்தித்தால், நிச்சயம் வருத்தமடைவார், அதுவே சர்தார் வல்லபபாய் படேல் சந்திக்க நேர்ந்தால், அவர் பிரதமர் மோடி மீது உண்மையில் மிகவும் கோபப்படுவார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com