குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிகாரில் இடதுசாரி கட்சிகள் இணைந்து இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிகாரில் இடதுசாரி கட்சிகள் இணைந்து இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் என பிகார் மஹாபந்தன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. பிகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி 'பிகார் பந்த்' அழைப்புக்கு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.
பிகார் மாநிலத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளில், கட்சிகள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தர்பங்கா மாவட்டம், லகெரிசராய் ரயில்வே நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டம் காரணமாக பர்பார் சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது.
பாட்னாவில் ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில், அகில இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக பிகாரில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


