குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. முக்கியமாக தலைநகர் தில்லி முழுவதுமே போராட்டக்களமாக காட்சி அளிக்கிறது.
உத்தரப்பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது வன்முறையாகவும் வெடித்துள்ளது. இதில் பொதுச்சொத்துக்கள் பல சேதப்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள்/ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சிகள் முழு நாட்டையும் தீக்கிரையாக்கியுள்ளன.
லக்னோ மற்றும் சம்பாலில் வன்முறை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இழப்புகளை ஈடுசெய்ய பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்' என்று அவர் கூறினார்.
மேலும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அரசின் அனுமதியின்றி எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது; அவ்வாறு தடையை மீறி செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது எந்த மதத்திற்கும், சமூகத்தின் ஒரு பிரிவினருக்கும் எதிரானது அல்ல. மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


