தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சொத்துக் குவிப்பு வழக்கு: ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய உத்தரவு 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி  மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2019, 9:42 am

IANS

புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி  மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.10 கோடி சொத்து சேர்த்ததாக அவர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. 

விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவை முறையாக இறுதி செய்ய வேண்டியுள்ள நிலையில், அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் ஆகியயோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவானது நீதிபதி சுனில் கவுர் முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "தான் எந்த விதமான உத்தரவையும் தற்போது பிறப்பிக்கப் போவதில்லை; முதலில் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யட்டும்" என்று தெரிவித்தார்.

அதேசமயம் வீரபத்ர சிங் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி, வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் மீதான மனு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.