ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உத்தரகாண்டில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் சாவு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 12 பேர் உயிரிழந்தனர். பலரின் நிலைமை

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 9:56 am

DIN


டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 12 பேர் உயிரிழந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் மறைமுகமாக கள்ளச்சாராயம் விறபனை செய்யப்பட்டு வருகிறது அங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார்? என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.