அகர்தலா: திரிபுராவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்வு மேடையில், சக பெண் அமைச்சரிடம் மாநில பாஜக அமைச்சர் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் ஆகியோர் கலந்துகொண்ட நலத்திட்ட விழா ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் கண்டே , கல்வெட்டு திறக்கப்படும் சமயத்தில் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக் மாவின் இடுப்பில் கை வைக்கிறார். இதையுணணர்ந்த சந்தனா அமைச்சர் மனோஜின் கையைத் தட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சைக்குளானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோஜ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், திரிபுரா எதிர்க்கட்சிகள் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆனால் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக திரிபுரா மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடியோ ஓன்று தற்போது வெளியாகி, இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை: தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரேன் பறக்கத் தடை

மக்களவை தொகுதி மறுவரையறையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


