திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை

ஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை அந்த மாநில அரசு புதன்கிழமை தொடங்கியுள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2019, 2:49 am IST


ஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை அந்த மாநில அரசு புதன்கிழமை தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தல்களுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்திட்டத்தை ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு தொடங்கி வைத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு அன்னதத்தா சுகிபவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,000 அளிக்கப்படுகிறது. இந்த தொகை, 2 தவணைகளாக, தலா ரூ.5,000 விதம், காரீப் மற்றும் ரபி பருவ காலத்தில் வழங்கப்படுகிறது.
மத்திய அரசால் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையுடன் சேர்த்து, ஆந்திர அரசால் கூடுதலாக ரூ.4,000 வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில வேளாண்துறை அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி கூறுகையில், மத்திய அரசின் உதவித் தொகையை பெறும் தகுதியுடைய விவசாயிகளுக்கு, ஆந்திர அரசின் உதவியை பெறும் தகுதியுண்டு. இதன்படி, ஆந்திரத்தை சேர்ந்த 54 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது. இவர்களுடன் சேர்த்து, மேலும் 15 லட்சம் விவசாயிகளுக்கு ஆந்திர அரசு நிதியுதவி அளிக்கவுள்ளது. தகுதியான விவசாயிகள் பட்டியலை இந்த மாத இறுதிக்குள் அளிக்க வேண்டுமென ஆந்திர அரசிடம் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்த பட்டியலை அளித்ததும், மத்திய அரசு ரூ.6,000 உதவித் தொகையை தலா ரூ.2,000 விதமாக 3 தவணைகளாக விவசாயிகளுக்கு அளிக்கும். அப்போது மத்திய அரசின் ரூ.2,000 தொகையுடன் ஆந்திர அரசின் சார்பில் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து ரூ.5,000ஆக அளிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.